மின்கம்பத்தில் சுற்றுலா வேன் மோதி விபத்து
மின்கம்பத்தில் சுற்றுலா வேன் மோதி விபத்து
கூடலூர்
ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு நேற்று மாலை 5 மணிக்கு சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை சுற்றுலா வேன் இழந்தது.
இதை கண்ட சக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி சுற்றுலா வேன் நின்றது. மேலும் கூடலூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சமயத்தில் பழைய பஸ் நிலைய பகுதியில் ஒரு அரசியல் கட்சி வேட்பாளரின் வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஏராளமான தொண்டர்கள் நின்றிருந்தனர்.
அந்த இடத்துக்கு சற்று தூரத்தில் விபத்து நடந்ததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வேனில் அமர்ந்திருந்த சுற்றுலா பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அங்கு கூடலூர் துணை சூப்பிரண்டு ஜெயசிங் தலைமையிலான போலீசார் வந்து, மின்கம்பத்தில் மோதி நின்ற சுற்றுலா வேனை மீட்டனர். பின்னர் சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story