விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்- 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது


விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்- 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
x
தினத்தந்தி 13 March 2021 10:42 PM IST (Updated: 13 March 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது.

விழுப்புரம், 


தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் (படிவம்-6) தனிப்பட்ட தொலைபேசி எண் (Unique Mobile No) பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) NVSP (https://www.nvsp.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக நேற்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

2,368 மையங்கள்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 370 வாக்குச்சாவடி மையங்களிலும், செஞ்சி தொகுதிக்குட்பட்ட 363 வாக்குச்சாவடி மையங்களிலும், மயிலம் தொகுதிக்குட்பட்ட 306 மையங்களிலும், திண்டிவனம் (தனி) தொகுதிக்குட்பட்ட 323 மையங்களிலும், வானூர் (தனி) தொகுதிக்குட்பட்ட 327 மையங்களிலும், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட 330 மையங்களிலும், திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட 349 மையங்களிலும் என மாவட்டம் முழுவதும் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

பட்டியல் சரிபார்ப்பு

இதில் புதிய வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொண்டனர். மேலும் வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்றும் சரிபார்த்துக்கொண்டனர். 

அதேபோல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் உரிய ஆவணங்களை கொடுத்தனர். இம்முகாம் நடைபெற்றதை அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story