தி.மு.க., அ.தி.மு.க.விடம் எதிர்கால பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான திட்டங்கள் எதுவும் கிடையாது என்று விழுப்புரம் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசினார்.
தி.மு.க., அ.தி.மு.க.விடம் எதிர்கால பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான திட்டங்கள் எதுவும் கிடையாது என்று விழுப்புரம் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசினார்.
விழுப்புரம்,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று திறந்த வேனில் பிரசாரம் செய்து விவசாயி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது விழுப்புரத்தில் அவர் பேசியதாவது:-
நாம் எத்தனையோ தேர்தல்களை சந்தித்தாலும் எந்த மாற்றத்தையும் அடையவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் எப்படியாவது என் மக்களை ஏமாற்ற வேண்டும் என்று எண்ணுகிறது. அதை எப்படியாவது மாற்ற நாங்கள் துடிக்கிறோம். போனஸ், சலுகை, மானியம், இலவசம் இந்த நான்குதான் தி.மு.க., அ.தி.மு.க.வின் திட்டம். எதிர்கால பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எந்தவொரு திட்டமும் கிடையாது. தொலைநோக்கு திட்டம், முற்போக்கு சிந்தனை இல்லாத சமூகம் எப்படி முன்னேறும். நமது உயிரினும் மேலானது நம்முடைய உரிமை. அந்த உரிமையை ஒருபோதும் பறிபோக விடக்கூடாது.
மாற்றத்தை கொண்டு வருவோம்
எல்லாத்துறைகளிலும் மாற்றம் வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த மாற்றத்தை கொண்டு வருவோம். ஒரே ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள், எல்லாவற்றையும் மாற்றுவோம். அதன் பிறகு எங்களை மாற்றுவதற்கு உங்களுக்கு மனது வராது. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் எதையும் செய்ய மாட்டார்கள். உலகத்தில் விவசாயத்தை கைவிட்ட நாடு பிச்சை எடுக்கும். விவசாயத்தை காப்பாற்ற விவசாயி சின்னத்திற்கு வாய்ப்பு அளியுங்கள். புரட்சியை எப்போதும் செய்வோம், புதிய தேசத்தை வெல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வட இந்தியர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பஸ் நிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் பேசுகையில்,
முதலில் நாம் தாய் மொழியில் இருந்து வெளியேற்றப்பட்டோம், பிறகு உழைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டோம், இப்போது நம்முடைய நிலத்தில் இருந்து வெளியேற்றும் வேலை நடைபெறுகிறது. நம் உழைப்பில் இருந்து வெளியேறிய பிறகு வட இந்தியர்கள் அனைத்து வேலைகளுக்கும் இங்கே வந்து விட்டார்கள். இவர்கள் இங்கேயே குடியுரிமையும், வாக்குரிமையும் பெற்றுள்ளனர். அவர்கள் நமது அரசியலையும் தீர்மானிப்பார்கள் எனவே இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கொடுமையான வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு இயற்றி உள்ளது. முதலாளியிடம் லாபம் பெறுவதற்காக நாட்டு குடிமக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும். இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு செலுத்தி நீங்கள் பெற்ற மாற்றம், கண்ட முன்னேற்றம், அடைந்த வளர்ச்சி ஏதும் இல்லை. எனவே உங்களை நம்பி கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story