நகைக்கடை உரிமையாளர் வந்த ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை
காட்டுமன்னார்கோவிலில் நகைக்கடை உரிமையாளர் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காட்டுமன்னார்கோவிலுக்கு ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. இதையறிந்த கண்காணிப்புக் குழு அதிகாரி சேரன் மற்றும் பறக்கும் படை அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, மாரியப்பன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஹெலிகாப்டரில் பணம் ஏதும் கொண்டு வரப்பட்டுள்ளதா என்று அதில் தீவிர சோதனை நடத்தினர். இருப்பினும் ஹெலிகாப்டரில் பணம் ஏதும் இல்லை.
தொடர்ந்து ஹெலிகாப்டரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த சீத்தாராமன் என்பதும், கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் நகை கடை வைத்திருப்பதும் தெரியவந்தது.
பரபரப்பு
மேலும் காட்டுமன்னார்கோவிலில் உள்ள குலதெய்வத்தை வழிபடுவதற்காக கேரளாவில் இருந்து ஹெலிகாப்டரில் காட்டுமன்னார்கோவிலுக்கு வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story