சட்டமன்ற தேர்தலையொட்டி கரூரில் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை


சட்டமன்ற தேர்தலையொட்டி கரூரில் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 14 March 2021 12:36 AM IST (Updated: 14 March 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலையொட்டி கரூரில் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடந்தது.

கரூர்
தேர்தல் பறக்கும் படை
தமிழகத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 18 பறக்கும் படை குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக்குழுக்களும், 4 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் மற்றும் 4 கணக்கீட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. 
இதில் கரூர் தொகுதியில் 6 பறக்கும்படை குழுக்களும், 6 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்களும் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாகன சோதனை குழுவில் துணை ராணுவப்படையினரும் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
வாகன சோதனை
இதன் ஒருபகுதியாக நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி அன்பரசன் தலைமையில் தலைமை காவலர் சக்திவேல், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட குழுவினர் நேற்று வாங்கப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள் அந்த வழியாக சென்ற இருசக்கரம், கார், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் கரூரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

Next Story