ராதாபுரம், அம்பை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு


ராதாபுரம், அம்பை தொகுதி  அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 14 March 2021 12:41 AM IST (Updated: 14 March 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம், அம்பை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வள்ளியூர்:
ராதாபுரம், அம்பை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராதாபுரம்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ. இன்பதுரை மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் சென்னையில் இருந்து வள்ளியூருக்கு வருகை தந்த வேட்பாளர் இன்பதுரைக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனை தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர், முத்துராமலிங்கதேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் முழு உருவ சிலைகளுக்கு இன்பதுரை எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில், “தமிழகத்தில் ராதாபுரம் தொகுதி நம்பர்-1 தொகுதி என்ற பெருமையுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராதாபுரத்திற்கு நீதிமன்றம், திசையன்விளை தனித்தாலுகா, வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம், நதிநீர் இணைப்பு திட்டம், தூண்டில் வளைவு திட்டம், பல்வேறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராதாபுரம் தொகுதி முன்மாதிரி தொகுதியாக விளங்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம்” என்றார்.

அம்பை

அம்பை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இசக்கி சுப்பையா கோபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள அற்புத சுந்தர விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக செண்டை மேளம் முழங்க, பட்டாசு வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து பிராஞ்சேரி கரடி மாடசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, மேலச்செவல் மற்றும் பத்தமடை ஆகிய பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் இசக்கி சுப்பையா கூறுகையில், “அம்பை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்ய உள்ளதாகவும், விவசாயம் மேம்படவும், ஜூன் 1-ந் தேதி கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க வழிவகை செய்ய பாடுபடுவேன்” என்றார்.

Next Story