பொற்பனை முனீஸ்வரர் கோவிலில் ருத்ர ஹோமம்


பொற்பனை முனீஸ்வரர் கோவிலில் ருத்ர ஹோமம்
x
தினத்தந்தி 14 March 2021 1:04 AM IST (Updated: 14 March 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

பொற்பனை முனீஸ்வரர் கோவிலில் ருத்ர ஹோமம்

புதுக்கோட்டை
இந்துசமய அறநிலையத் துறையைச் சேர்ந்த புதுக்கோட்டை  பொற்பனைக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காகவும், மாசிமாத அமாவாசையை முன்னிட்டும், கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்புடன் நடந்திடவும் ருத்ர ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் கணபதி பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம், கன்யா பூஜை, லட்சுமி பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முனீஸ்வரருக்கு திரவியப்பொடி, பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீர் சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகமும், கலசாபிஷேகமும், 27 நட்சத்திரங்களுக்கான புண்ணிய தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, எரிச்சி, ஆலங்குடி, திருவரங்குளம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story