அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டம் நீடிப்பு
அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டம் நீடிப்பு
அறந்தாங்கி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ராஜநாயகம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், அவரை மாற்றக்கோரி கடந்த சில நாட்களாக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. தொண்டர்கள் தீக்குளிக்கவும் முயன்றனர். இந்தநிலையில் வேட்பாளரை மாற்றக்கோரி நேற்று அ.தி.மு.க.வினர் அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே கையில் தேங்காய் வைத்தும், சூடம் ஏற்றியும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வடகரை முருகன் கோவில் வாசலில் தேங்காயை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்பாளருக்கு எதிராக தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story