மயானக்கொள்ளை திருவிழா
சூரக்குழி கிராமத்தில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று மயானக்கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா நேற்று காலை தொடங்கியது.
அங்காளம்மன், பாவாடைராயன் சாமிகளுக்கு பன்னீர், சந்தனம், இளநீர், கபம், திரவியப்பொடி போன்ற 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபம் கொண்டு நிசானி உடல் கிழித்து குடல் பிடுங்கி வள்ளால கோட்டை இடித்து வீதியுலா புறப்பட்டார்.
இதில் பாவாடைராயன், அங்காளம்மன், காட்டேரி, ரத்த காட்டேரி போன்று பக்தர்கள் வேடமிட்டு முக்கிய வீதி வழியாக சென்றனர். நேற்று மாலை சூரக்குழி அருகே உள்ள மயானத்தில் மயானக்கொள்ளை விடுதல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்டிமடம், சூரக்குழி, சூனாபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
Related Tags :
Next Story