மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்


மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 14 March 2021 1:40 AM IST (Updated: 14 March 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் தொடங்கியது.

பெரம்பலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 2 நாட்கள் சிறப்பு முகாம், நேற்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் தொடங்கியது. இந்த முகாமில் ஏற்கனவே புதியதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்போன் எண்ணை வழங்கியவர்களுக்கு, மின்னணு வாக்காளர் அடையாள அட்டை செல்போன், கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது. மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் நடந்த முகாமினை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் விளாங்குடி, கைகாட்டியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் வாகன சோதனை செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story