முசிறி அருகே ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல்
முசிறி அருகே ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.
முசிறி,
முசிறி அருகே தண்டலைபுத்தூரில் தேர்தல்பறக்கும் படை அலுவலர் வெங்கடேசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெரமங்கலம் பகுதியை சேர்ந்த திவாஷ் (வயது 30) என்பவரிடம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 400 இருந்தது.
விசாரணையில், பேரூர் கிராமத்தை சேர்ந்த ஒரு நபரிடம் மாடு வாங்கியதற்கு உரிய பணத்தை கொடுப்பதற்காக அதை எடுத்துச்செல்வதாக கூறினார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து முசிறி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரதேவநாதன் மூலம் முசிறி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story