நாட்டுத்துப்பாக்கி தயாரித்த தொழிலாளி கைது


நாட்டுத்துப்பாக்கி தயாரித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 14 March 2021 2:51 AM IST (Updated: 14 March 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே நாட்டுத்துப்பாக்கி தயாரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

செந்துறை: 
நத்தம் அருகே செந்துறையை அடுத்த பழனிபட்டியை சேர்ந்தவர் சின்னு (வயது 47). கூலித்தொழிலாளி. 

இவருடைய தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்வதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் போலீசார் நேற்று அவருடைய தோட்டத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். 

அங்கு துப்பாக்கி தயாரிப்பதற்கான இரும்பு குழாய், மரக்கட்டை உள்ளிட்ட பொருட்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னுவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story