அமாவாசையையொட்டி நெருப்பூர் முத்தையன் சாமி கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


அமாவாசையையொட்டி நெருப்பூர் முத்தையன் சாமி கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 March 2021 7:38 AM IST (Updated: 14 March 2021 7:45 AM IST)
t-max-icont-min-icon

அமாவாசையையொட்டி நெருப்பூர் முத்தையன் சாமி கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நெருப்பூர் வனப்பகுதியில் முத்தையன் சாமி கோவில் உள்ளது. குகை கோவிலான இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தினத்தில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று அமாவாசையையொட்டி முத்தையன் சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. அப்போது தரையில் படுத்து இருந்த பக்தர்கள் மீது சாமியை எடுத்து வந்தவர்கள் தாண்டி சென்றனர்.

மேலும் குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களின் குழந்தைகளின் எடைக்கு எடை நாணயங்கள், வாழை பழங்கள் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் எடைக்கு எடை காசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏரியூர், நெருப்பூர், பென்னாகரம், கொளத்தூர், பண்ணவாடி, மேட்டூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story