தேவரபெட்டா மலை கிராமத்தில் மஞ்சுநாத் சாமி கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


தேவரபெட்டா மலை கிராமத்தில் மஞ்சுநாத் சாமி கோவில் தேரோட்டம்  பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 14 March 2021 7:48 AM IST (Updated: 14 March 2021 7:52 AM IST)
t-max-icont-min-icon

தேவரபெட்டா மலை கிராமத்தில் மஞ்சுநாத் சாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தேவரபெட்டா மலை கிராமத்தில் பழமை வாய்ந்த மஞ்சுநாத் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. 

இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் மஞ்சுநாத் சாமி ஏற்றப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் ஆனேக்கல், அத்திப்பள்ளி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story