தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு


தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 March 2021 8:07 AM IST (Updated: 14 March 2021 8:09 AM IST)
t-max-icont-min-icon

தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

தேன்கனிக்கோட்டை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என பார்வையிட்டார்.

மேலும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Next Story