தி.மு.க. வெளியிட்டது பொய்யான வெற்று அறிக்கை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு


தி.மு.க. வெளியிட்டது பொய்யான வெற்று அறிக்கை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 March 2021 8:36 AM IST (Updated: 14 March 2021 8:37 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. வெளியிட்டது பொய்யான வெற்று அறிக்கை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி யில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் போட்டி யிடுகிறார். இந்த நிலையில் சென்னையில் இருந்து கோவை திரும்பிய அவர், நேற்று கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகமான இதய தெய்வம் மாளிகைக்கு வந்தார்.

அங்கு கட்சி அலுவலகத்தில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர், அ.தி.மு.க. தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். 

இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க. வேட்பாளர்கள் அம்மன் அர்ச்சுனன் (கோவை வடக்கு), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), தாமோதரன் (கிணத்துக்கடவு), கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்), வி.பி.கந்தசாமி (சூலூர்) மற்றும் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அலை வீசுகிறது. அவர், சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதல் - அமைச்சராக பொறுப்பேற்பார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை, பொய்யான வெற்று அறிக்கை.

உண்மையான தேர்தல் அறிக்கை என்பது அ.தி.மு.க. வெளியிடுவது தான். முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தேர்தல் அறிக்கை தொடர்பான முன்அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story