கோவை மாநகராட்சி மருத்துவமனைகள் உள்பட 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி
கோவை மாநகராட்சி மருத்துவமனைகள் உள்பட 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை,
கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற தொற்றா நோய் உள்ளவர்கள்,
கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை எடுத்துச்சென்று கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக போட்டுக்கொள்ளலாம்.
34 இடங்கள்
இலவச தடுப்பூசியை 34 இடங்களில் உள்ள மருத்துவ மையங்களில் போட்டுக்கொள்ளலாம். அதன்விவரம் வருமாறு:-
1.கோவை அரசு ஆஸ்பத்திரி, 2.காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை, 3.காந்திபுரம், லட்சுமி காம்பிளக்ஸ் அருகில் உள்ள சி.டி.எம். ஹோம். 4. கணபதி மாநகராட்சி பள்ளி,
5. டாக்டர் நஞ்சப்பாரோடு. 6. கே.கே.புதூர் மணியம் வேலப்பா வீதி, 7.பாரதி பார்க் ரோடு எம்.எம்.ஹோம், 8. நஞ்சுண்டாபுரம் ரோடு பெருமாள் கோவில் வீதி, 9. சுக்கிரவார்பேட்டை, பட்டு நூல்காரர் வீதி, 10. பீளமேடு பயனீர்மில் ரோடு.
11. ராஜவீதி மாநகராட்சி கார் பார்க்கிங் அருகில், 12. சுங்கம், நேருபார்க் அருகில். 13. ரத்தினபுரி, நேரு வீதி, மாநகராட்சி பள்ளி அருகில். 14. காந்திபார்க், சுந்தரம் வீதி. 15. பி.என்.புதூர் கோகுலம் காலனி,
16. செல்வபுரம், பேரூர் மெயின்ரோடு. 17. புரூக்பீல்டுகிருஷ்ணசாமி ரோடு அருகில் உள்ள சீதாலட்சுமி மருத்துவமனை. 18. உடையாம்பாளையம், கருவலூர் மாரியம்மன்கோவில் வீதி, 19. தெலுங்குபாளையம், முத்தையா உடையார் வீதி,
20. உப்பிலிபாளையம், வரதராஜபுரம் மெயின்ரோடு.
21. பேரூர் ரோடு, வைசியாள் வீதி. 22. சிங்காநல்லூர், ஆணையங்காடு ரோடு, 23. பீளமேடு, காந்திமாநகர், முருகன் நகர், 24. விளாங்குறிச்சி, காந்திவீதி, தபால்நிலையம் அருகில். 25.நீலிக்கோணாம்பாளையம், சமுதாயகூட கட்டிடம்,
26. குனியமுத்தூர், பாலமுருகன் கோவில் பின்புறம் உள்ள பாங்க் ஆபீசர் காலனி, 27. மருதமலைமெயின்ரோடு, கல்வீரம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில். 28. இடிகரைரோடு, அரவான்கோவில் அருகில். 29. போத்தனூர், சத்திரம் வீதியில் உள்ள போலீஸ் நிலையம் அருகில்.
30. வெள்ளக்கிணறு உழைப்பாளர் வீதி. 31.குனியமுத்தூர், இடையர்பாளையம், ஸ்ரீராம் காலனி. 32. போத்தனூர், மேட்டூர், நாச்சிமுத்து கவுண்டர் வீதி. 33. வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோடு, தாட்கோ கட்டிடம். 34. கவுண்டம்பாளையம், கல்பனா தியேட்டர் ரோடு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story