சட்டமன்ற தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் வரவேற்கப்படுகிறார்கள் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
சென்னை,
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை மாவட்டத்தை சேர்ந்த உடல் ஆரோக்கியமுள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் சேவை தேவைப்படுகிறது.
எனவே, முன்னாள் ராணுவத்தினர் உடனடியாக சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story