ஜலகண்டாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மேஸ்திரி சாவு


ஜலகண்டாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மேஸ்திரி சாவு
x
தினத்தந்தி 14 March 2021 5:26 PM IST (Updated: 14 March 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்து மேஸ்திரி சாவு

மேச்சேரி:
ஜலகண்டாபுரம் அருகே உள்ள பாண்டியன் வளவு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). விசைத்தறி மேஸ்திரி. இந்த நிலையில் அவர்  தனது உறவினர் இறந்ததால், துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, அந்த பகுதியில் நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்ேபாது அங்குள்ள ஒரு கிணற்றில் கால் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story