திருக்கழுக்குன்றம் அருகே, கிணற்றில் பள்ளி மாணவி பிணம்


திருக்கழுக்குன்றம் அருகே, கிணற்றில் பள்ளி மாணவி பிணம்
x
தினத்தந்தி 14 March 2021 7:50 PM IST (Updated: 14 March 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் பள்ளி மாணவி பிணமாக கிடந்தார்.

கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ரோகிணி (வயது 17). அருகில் உள்ள களத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி காலையில் பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்பட்டு கிராமத்தில் கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டனர். மாயமான பள்ளி மாணவி ரோகிணி என்பது தெரியவந்தது.

போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story