திருப்போரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு


திருப்போரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு
x

திருப்போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருடப்பட்டது.

திருப்போரூர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த காயார் சாந்தி பாட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது மனைவி காமாட்சி (28), மகள் லித்திகா. மகன் தர்ஷின்.

சுரேஷின் தந்தை ராஜமாணிக்கம். காங்கிரஸ் கட்சி பிரமுகர்.

நேற்று முன்தினம் இரவு சுரேஷ் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தர். நேற்று காலை காமாட்சி எழுந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

பூஜை அறையில் இருந்த 35 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், மகளின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் வந்த மொய் பணம் ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. நகை பெட்டிகளை அருகாமையில் உள்ள கிணற்றில் வீசி சென்றுள்ளனர்

இது குறித்து காயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், மற்றும் காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

செங்கல்பட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story