மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு
மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தொண்டி,
தொண்டி முடிச்சலான் தோப்பு பகுதியில் மண்டல துணை தாசில்தார் சேதுராமன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ், தொண்டி கிராம உதவியாளர் ஆகியோர் மணல் திருட்டை கண்காணிக்கும் வகையில் ரோந்து சென்றனர். அப்போது அரசு அனுமதியின்றி ஒருமாட்டு வண்டியில் மணல் மூடைகளை ஏற்றி கொண்டு வந்தது. மேலும் காரில் சிலர் மணல் மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போது அதிகாரிகளை கண்டதும் அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனராம்.
அதனைத் தொடர்ந்து மாட்டுவண்டி மற்றும் காரை கைப்பற்றி தொண்டி போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்து உள்ளனர். இதுகுறித்து மண்டல துணை தாசில்தார் சேதுராமன் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ சம்பவம் தொடர்பாக வெல்லயபுரம் மண்டல கோட்டை அன்பு மற்றும் நம்புதாளை கிழக்கு தெரு பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story