மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்த பஞ்சு லாரி
தீப்பிடித்து எரிந்த பஞ்சு லாரி
மடத்துக்குளம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு பஞ்சாலையில் இருந்து கழிவு பஞ்சுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மடத்துக்குளம் வழியாக கும்பகோணம் சென்று கொண்டிருந்தது. லாரியை கனகராஜ் (வயது 50) என்பவர் ஓட்டினார். அந்த லாரி மடத்துக்குளம் பகுதியில் உள்ள உடுமலை- பழனி நெடுஞ்சாலையில் ஒரு சினிமா தியேட்டர் அருகே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஞ்சு மூட்டைகளில் மின்கம்பி உரசியது. இதனால் பஞ்சு மூட்டைகளில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ குபீரென்று லாரி முழுவதும் பரவியது. இதையடுத்து லாரியை நிறுத்தி விட்டு, லாரி டிரைவர் கீழே குதித்தார். பின்னர் அருகில் உள்ள பொதுமக்கள் அனைவரும் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர், தீப்பிடித்து எரிந்த கொண்டிருந்த லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் லாரியில் உள்ள பஞ்சுகள் முற்றிலும் எரிந்து விட்டது. இந்த தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பஞ்சுள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் அதிகாரிகள் விசாரனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story