கள்ளக்குறிச்சி, சின்னசேலத்துக்கு கூட்டு குடிநீர் திட்டம் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி, சின்னசேலத்துக்கு கூட்டு குடிநீர் திட்டம் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
சென்னை
தேர்தல் அறிக்கை
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதில் மாவட்டந்தோறும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
புதிய பஸ்நிலையம்
* மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு விரிவுபடுத்தப்படும்.
* கள்ளக்குறிச்சியில் புறவழிச் சாலை அமைக்கப்படும்.
* கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்.
* கள்ளக்குறிச்சியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
* கள்ளக்குறிச்சியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும்.
* முஸ்குந்தா ஆறு அணை திட்டம் நிறைவேற்ற ஆய்வு மேற்கொள்ளப்படும்.
* சின்னசேலம் மற்றும் ரிஷிவந்தியத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும்.
நெல்கொள்முதல் நிலையம்
* ரிஷிவந்தியத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.
* கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2-ம் நிலை பணிகள் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோமுகி ஆற்றில் கச்சிராயப்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி சாலையில் மேம்பாலம் கட்டப்படும்.
* மரவள்ளி கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும். சங்கராபுரத்தில் மரவள்ளிக் கிழங்கு தொழிற்சாலை அமைக்கப்படும்.
* சின்னசேலம் - கல்லாந்தம் மலையில் சிறிய அணை கட்டப்படும்.
ரெயில் போக்குவரத்து
* கள்ளக்குறிச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரியும், சங்கராபுரத்தில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும்.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 3-ம் கட்டப் பணிகள் நிறைவேற்றப்படும்.
* சங்கராபுரம் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும்.
* கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை நான்கு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* கள்ளக்குறிச்சிக்கும் - திருவண்ணாமலைக்கும் இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கடுக்காய் தொழிற்சாலை
* கல்வராயன் மலை சுற்றுலா தலமாக ஆக்கப்படும்.
* கள்ளக்குறிச்சி- உளுந்தூர்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* திருக்கோவிலூர் காந்தி காய்கறி மார்கெட் நகருக்கு வெளியே மாற்றப்படும்.
* வெள்ளிமலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படும்.
* கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரத்தில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும்.
Related Tags :
Next Story