தேன்கனிக்கோட்டை அருகே, மாதேஸ்வரா சாமி கோவில் தேரோட்டம் - எருது விடும் விழாவில் மாடு முட்டி 30 பேர் காயம்


தேன்கனிக்கோட்டை அருகே, மாதேஸ்வரா சாமி கோவில் தேரோட்டம்  - எருது விடும் விழாவில் மாடு முட்டி 30 பேர் காயம்
x
தினத்தந்தி 14 March 2021 10:38 PM IST (Updated: 14 March 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மாதேஸ்வரா சாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டி 30 பேர் காயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கல்லுபாலம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாதேஸ்வரா சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து எருது விடும் விழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. இந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அடக்கினர். 

விழாவில் மாடுகள் முட்டி 30-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், மாடு பிடி வீரர்கள் காயம் அடைந்தனர். எருது விடும் விழாவை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு ரசித்தனர்.

Next Story