விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் சாவு


விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்;  2 பேர் சாவு
x
தினத்தந்தி 14 March 2021 10:44 PM IST (Updated: 14 March 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் உயிாிழந்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி( வயது 35).இதேபோல்  சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (38 ).  தொழிலாளிகள். நேற்று மாலை வேலை முடிந்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். 

விழுப்புரம் சென்னை புறவழிச்சாலை முத்தாம்பாளையம் கிராம சாலை அருகே சென்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.


இதில் படுகாயமடைந்த  நாகமணி, மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story