பறக்கும் படை சோதனையில் ரூ.1¾ லட்சம் பறிமுதல்
கம்பம் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ 1 லட்சத்து 86 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பம் :
கம்பம் அருகே உள்ள சின்னவாய்க்கால் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேதுக்குமார் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, காமயகவுண்டன்பட்டியை நோக்கி வந்த காரை பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர்.
இதில் காரில் ரூ.1 லட்சம் இருந்தது.
இது குறித்து காரை ஓட்டி வந்த அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது54) என்பதும், காய்கறி வியாபாரி என்பதும் தெரியவந்தது.
அவரிடம் பணம் வைத்திருந்ததற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விவசாயி
இதேபோல் சின்னவாய்க்கால் பகுதியில் வந்த ஒரு காரை தேர்தல் பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர்.
அப்போது காரில் ரூ.86 ஆயிரத்து 500 இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த அதன் உரிமையாளரிடம் விசாரித்தபோது அவர் கம்பம் வரதராஜபுரத்தை சேர்ந்த விவசாயியான திருப்பதிகனகராஜா (51) என்பதும், அவரிடம் பணம் வைத்திருந்ததற்கான ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 500-ஐ பறக்கும் படையினர் உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story