திறந்தவெளி சிறையில் இருந்த கைதி திடீர் சாவு


திறந்தவெளி சிறையில் இருந்த கைதி திடீர் சாவு
x
தினத்தந்தி 14 March 2021 11:33 PM IST (Updated: 14 March 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

காைளயார்ேகாவில் திறந்தவெளி சிறையில் இருந்த கைதி திடீரென்று இறந்தார்.

காளையார்கோவில்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் ஊராட்சி ராமகிருஷ்ணாபுரம் புதூரை சேர்ந்தவர் ஐயனார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 36). இவர் கொலைவழக்கு ஒன்றில் தண்டனை பெற்று மதுரை சிறையில் இருந்தார். பின்னர் காளையார்கோவில் அருகே உள்ள புரசடிஉடைப்பு கிராமத்தில் திறந்தவெளி சிறைச்சாலை தொடங்கப்பட்ட பின்னர் தமிழ்செல்வன் இங்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைதொடர்நது தமிழ்செல்வனை சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
இது தொடர்பாக காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு.செய்து விசாரணை நடத்தி  வருகிறார்கள். இதைதொடர்ந்து. தமிழ்ச்செல்வன் இறப்பு தொடர்பாக இளையான்குடி மாஜிஸ்திரேட்டு சுனில்ராஜா நேரடியாக மருத்துவமனை சென்று விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் உலகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துக்கருப்பன் ஆகியோர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி கூறும் போது,
மரணம் அடைந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மேலும் திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் குறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கேட்டறிய வேண்டும். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



Next Story