எஸ்.புதூர்,
தமிழக அரசு வேளாண்மைத்துறை மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை இணைந்து எந்திரம் மூலமாக நிலக்கடலை விவசாயம் குறித்த செயல்விளக்க பயிற்சியை எஸ்.புதூர் அருகே உள்ள மின்னமலைப்பட்டி கிராமத்தில் நடத்தியது. இதற்கு வேளாண் உதவி இயக்குனர் அம்சவேணி தலைமை தாங்கினார். இதில் மின்னமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டி நிலத்தில் எந்திரம் மூலமாக நிலக்கடலை பயிரிட்டு செயல்முறை விளக்கங்கள் எடுத்து கூறப்பட்டது. இதில் வேளாண் அலுவலர் ஞானசேகரன், வேளாண் விதை அலுவலர் பாலமுருகன், எஸ்.புதூர் வட்டார வயலக திட்ட நிர்வாகி செல்வமணி, வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.