தேங்கி கிடக்கும் 5 லட்சம் நெல்மூட்டைகள்


தேங்கி கிடக்கும் 5 லட்சம் நெல்மூட்டைகள்
x
தினத்தந்தி 15 March 2021 12:07 AM IST (Updated: 15 March 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் பகுதி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் 5 லட்சம் நெல்மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டூர்:
கோட்டூர் பகுதி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் 5 லட்சம் நெல்மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
5 லட்சம் நெல்மூட்ைடகள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 60-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து 6 லட்சம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய பட்டு அனைத்தும் அந்தந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டது. கொள்முதல் பனிகள் தொடங்கி 2 மாதங்கள் ஆகிறது. இதுவரை ஒருலட்சம் முட்டைகள்அளவுக்கு தான் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. மீதி உள்ள 5 லட்சம் நெல் முட்டைகள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.  
வீணாகி வருகிறது
இதனால் நெல்மணிகள் கருத்தும் பழுப்பு நிறமாக மாறி தரமான அரிசியை தயாரிக்க முடியாத அளவு வீணாகி வருகிறது. 
எனவே கோட்டூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமைதூக்கும்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story