சிலுவைப்பாதை வழிபாடு


சிலுவைப்பாதை வழிபாடு
x

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் உள்ள புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் உள்ள புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது. 
தியான வழிபாடு
 தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான நேற்று ஒருநாள் தியான வழிபாடு நடைபெற்றது. நேற்று காலை 9 மணி அளவில் ஆர்.ஆர். நகர் பங்குத்தந்தை அலெக்ஸ்ஞானராஜ் அடிகளார், துணை பங்குத்தந்தை பென்சிகர் அடிகளார் ஆகியோர் வழிபாட்டை தொடங்கி வைத்தனர்.
 அதனைத்தொடர்ந்து மதுரை லாரன்ஸ்அடிகளார் தலைமையில் தியான வழிபாடு நடைபெற்றது. அதில் மன்னிப்பு வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்பட்டது.
திருயாத்திரை 
 மதியம் 2 மணியளவில் விருதுநகர் ஆர்.ஆர்.நகர், பாண்டியன் நகர், நிறைவாழ்வுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, தும்மு சின்னம்பட்டி, காரியாபட்டி, திருத்தங்கல், சாட்சியாபுரம், மரியானூஸ்நகர், மீனம்பட்டி, வடபட்டி உள்ளிட்ட 14 கத்தோலிக்க பங்குகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் திருயாத்திரையாக வந்தனர்.  இதனை தொடர்ந்து விருதுநகர் மறை வட்டாரதிபர் பெனடிக்ட்அம்புரோஸ்ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் ஏசு கிறிஸ்துவின் 14 பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
கூட்டுத்திருப்பலி 
அதன்பின் மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் விருதுநகர் மறைவட்டாரபங்குத்தந்தையர்கள் பெனடிக்ட் அம்புரோஸ் அடிகளார், துணைப்பங்குத்தந்தை சந்தியாகப்பன் அடிகளார், ஆர்.ஆர்.நகர் அலெக்ஸ் ஞானராஜ் அடிகளார், பென்சிகர் அடிகளார், பாண்டியன் நகர் ஸ்டீபன் சேவியர் அடிகளார், நிறைவாழ்வுநகர் தாமஸ் வெனிஸ்அடிகளார், சாத்தூர் மிக்கேல்ராஜ் அடிகளார், ஒத்தையால் ஜெயராஜ் அடிகளார், அருப்புக்கோட்டை சிப்ரியான் அடிகளார்,  தும்முசின்னம்பட்டி சூசைமரியான் அடிகளார், காரியாபட்டி ஜோக்கிம் அடிகளார்,  சிவகாசி மார்ட்டின் அடிகளார், திருத்தங்கல் டேவிட்தர்மராஜ்அடிகளார், சாட்சியாபுரம் மரியனூஸ்நகர் செபஸ்தியான் ஜெரோம்அடிகளார், மீனம்பட்டி பிரான்சிஸ் சேவியர் அடிகளார், வடபட்டி பெரியநாயகம் அடிகளார்,  மதுரை லாரன்ஸ் அடிகளார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  திருப்பலியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்,  அருட்சகோதர, சகோதரிகள் போதிய சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

Next Story