திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேற்று மாலை திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். அதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை? அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் பகுதியில் இரணசிங்கபுரம், ஆறுமுகம்பிள்ளை அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, பாபா அமிர்பாதுஷா மேல்நிலைப்பள்ளி, தென்மாபட்டு, புதுப்பட்டி, நெடுமரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளையும், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அலுவலகத்தையும் நேரில் பார்வையிட்டார்.