தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
வெம்பக்கோட்டை பகுதியில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதியில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார்.
அதிகாரி ஆய்வு
வெம்பக்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியாபுரம், செவல்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்யும் பணியினை தேர்தல் செலவின பார்வையாளர் பிரபான்ஷிகுமார் ஸ்ரீ வட்சவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பறக்கும்படையை சேர்ந்த சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ், வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆய்வு செய்வது குறித்து கேட்டறிந்தார்.
பணம் பறிமுதல்
வாகன சோதனையின் போது பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டால் சாத்தூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். அரசியல் கட்சியினர் கார்களில் கொடி கட்டி வந்தாலும், வேட்பாளர்கள் பின்னால் அதிக வாகனங்கள் தொடர்ந்தாலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story