தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள கிரீன்பில்டு பகுதியை சேர்ந்தவர் சுகேந்திரன்(வயது 40). இவர் ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இதற்கிடையே அவரது வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த சுகேந்திரன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story