தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
பழங்குடியினர் வசிக்கும் பகுதியான காரையார் காணிக்குடியிருப்பு, சின்னமயிலாறு பகுதிகளுக்கு தேர்தல் அதிகாரி மகாலட்சுமி, அம்பை தாசில்தார் வெங்கட்ராமன் ஆகியோர் சென்றனர்.
உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம் என்ற வாசகங்கள் அடங்கிய பனியன்கள் அணிந்து சென்ற அதிகாரிகள், 100 சதவீத வாக்குகள் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உறுதி மொழி எடுத்தனர்.
Related Tags :
Next Story