முக கவசம் அணியாத 71 பேருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 71 பேரிடம் இருந்து ரூ.14 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக பொதுமக்கள் அனைவரும் வெளியில் வரும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
அதன் பேரில் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் உள்ள வணிக வளாகங்கள், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முக கவசம் அணியாமல் வந்த 40 பேர் அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.8 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
அதேபோல் தாடிக்கொம்பு பகுதியில் நேற்று முன்தினம் சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தாடிக்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே முக கவசம் அணியாமல் வந்த 31 பேர் சிக்கினர்.
அவர்களுக்கும் தலா ரூ.200 வீதம் ரூ.6 ஆயிரத்து 200 அபராதமாக விதிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.14 ஆயிரத்து 200- ஐ மாநகராட்சி அதிகாரிகள் அபராத தொகையாக வசூலித்துள்ளனர்.
Related Tags :
Next Story