கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள ஏழு ஊர் மாரியம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று தீமிதி விழா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரங்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முத்துமாரியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 14 அக்னி குண்டங்களில் பொன்னமராவதி, ரெட்டியாபட்டி, மூலங்குடி, செம்பூதி, செவலூர், ஆலவயல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இந்து அறநிலையத்துறையின் சார்பில் உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் வைரவன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி கோவில் கோபுரத்திற்கு புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபராதனை செய்யப்பட்டுபூக்கள் ஹெலிகேமரா மூலம் தூவப்பட்டது.

Related Tags :
Next Story