தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 15 March 2021 1:30 AM IST (Updated: 15 March 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

பழனி:
பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் செலவின பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட தேர்தல் செலவின பார்வை அலுவலர் ராஜாகோஸ் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. ஆனந்தி முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வை அலுவலர் பேசுகையில், அரசியல் கட்சி கூட்டங்கள் நடைபெறும்போது அதற்கான செலவினங்களை பதிவிடுவது, தலைவர்கள் பிரசாரத்தின்போது அரசியல் கட்சியின் நடவடிக்கைகளை கண்காணிப்பது குறித்து எடுத்துரைத்தார். 

மேலும் வாகன தணிக்கையின் போது பணம், பொருட்கள் பறிமுதல் செய்தால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சி கூட்ட நிகழ்ச்சிகளை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும், 

எந்த அரசியல் கட்சியினருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்று அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் நிலை கண்காணிப்புக்குழு, பறக்கும்படையில் உள்ள அலுவலர்கள், போலீசார் கலந்துகொண்டனர். 

Next Story