குற்றாலம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


குற்றாலம் அருகே  பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 15 March 2021 1:33 AM IST (Updated: 15 March 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.

தென்காசி:

குற்றாலம் அருகே உள்ள வல்லம் கிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர் சக்தி மனைவி ரமாமணி (வயது 28). இவர்கள் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில்  சாமி கும்பிட சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் திடீரென ரமாமணி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story