லாரி மோதி சிறுவன் பலி


லாரி மோதி சிறுவன் பலி
x
தினத்தந்தி 15 March 2021 2:03 AM IST (Updated: 15 March 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி சிறுவன் பலி

திருமங்கலம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகணியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் துரைப்பாண்டி (வயது 12). நேற்று துரைப்பாண்டி சைக்கிளில் கூடகோவிலில் இருந்து திருமங்கலம் ரோட்டில் சென்றான். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக துரைபாண்டி மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இதுகுறித்து கூடகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உலகாணியை சேர்ந்த குருநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story