கைப்பந்து போட்டி நடுவர்களுக்கான பயிற்சி முகாம்


கைப்பந்து போட்டி நடுவர்களுக்கான பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 15 March 2021 2:18 AM IST (Updated: 15 March 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

கைப்பந்து போட்டி நடுவர்களுக்கான பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

திருச்சி,
கைப்பந்து போட்டி நடுவர்களுக்கான பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடந்தது. திருச்சி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் நடந்த இந்த முகாமில் திருச்சியை சேர்ந்த தேசிய மற்றும் மாநில நடுவர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் புதிய நடுவர்களுக்கான எழுத்துத் தேர்வும் நடைபெற்றது. இதில் 10 பெண்கள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் தங்கபிச்சையப்பா மற்றும் செயலாளர் கோவிந்தராஜன் செய்து இருந்தனர்.

Next Story