காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஜோதிமணி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:
ஆர்ப்பாட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. நீண்ட காலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் என சமூக வலைதளங்களில் காங்கிரஸ் தலைமை மீது கரூர் ஜோதிமணி எம்.பி. குற்றம்சாட்டி உள்ளது.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கரூர் தாந்தோணிமலை காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ஜோதிமணிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், கரூர் ஜோதிமணி எம்.பி காங்கிரஸ் தலைமையை களங்கப்படுத்தும் வகையில் பணம் வாங்கி கொண்டு தொகுதிகளை ஒதுக்கி, வேட்பாளர்களை தேர்வு செய்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியுள்ளார். முறையாகத்தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவருக்கு வேண்டியவர்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்பதால் தலைவர்கள் மற்றும் குழுவினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். எனவே ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் தன்னை தவிர யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜோதிமணி இவ்வாறு செயல்படுகிறார், என்றார்.
Related Tags :
Next Story