மாநில சிலம்பம் போட்டி: பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு வரவேற்பு


மாநில சிலம்பம் போட்டி: பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 15 March 2021 2:18 AM IST (Updated: 15 March 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

மாநில சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி, 
8-வது மாநில சிலம்பம் போட்டி சென்னையில் நடந்தது. இதில் திருச்சி சார்பில் போலீஸ்காரர் அரவிந்த் தலைமையில் 16 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளின் முடிவில் திருச்சி வீரர்கள் 12 தங்கம், 3 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை பெற்றனர். அதிகபட்சமாக சுகித்தா மற்றும் மனோஜ்குமார் தலா 2 தங்கப்பதக்கங்களை தட்டிச்சென்றனர். இந்தநிலையில் பதக்கம் பெற்று திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உலக இளைஞர் சம்மேளன தலைவர் மோகன் மற்றும் சிலம்ப கழக நிர்வாகிகள், பெற்றோர் கலந்து கொண்டு வீரர்களை வரவேற்றனர்.

Next Story