திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் முன் கண்ணீர் விட்டு அழுத பெண் எம்.எல்.ஏ.
திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் முன் சீட் கிடைக்காததால் பெண் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் முன் சீட் கிடைக்காததால் பெண் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக விமானம் மூலம் நேற்று இரவு திருச்சிக்கு வந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை வரவேற்பதற்காக அ.தி.மு.க. வேட்பாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் காத்திருந்தனர்.
அவர்களுடன் அப்போது முதல்-அமைச்சருக்கு பூங்கொத்து கொடுப்பதற்காக மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. பரமேஸ்வரி காத்திருந்தார். வேட்பாளர்கள் அனைவரும் பூங்கொத்து கொடுத்து முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.
கண்ணீர் விட்ட எம்.எல்.ஏ.
பிறகு கடைசியில் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி பூங்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரிடம் ஆசி பெற்றார். அப்போது தற்போது தேர்தலில் தனக்கு அ.தி.மு.க.வில் வாய்ப்பு வழங்கப்படாததால் திடீரென கண்ணீர் விட்டு அழுதார்.
இதைப்பாா்த்த பத்திரிகையாளர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர். இதனால் அவர், அழுதுகொண்டே வேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருச்சி விமான நிலைய பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story