ஈரோட்டில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
ஈரோட்டில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினா்.
ஈரோடு
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 92 துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் துணை ராணுவத்தினர் நேற்று காலை கொடி அணிவகுப்பு நடத்தினர். கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு பவானி ரோடு வழியாக சென்று திருநகர் காலனி பகுதியில் நிறைவடைந்தது. இதில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுத்து சென்றார்கள்.
Related Tags :
Next Story