கொடுமுடி, கோபி, பெருந்துறை பகுதியில் முகக்கவசம் அணியாத 103 பேருக்கு ரூ.20,600 அபராதம்


கொடுமுடி, கோபி, பெருந்துறை பகுதியில் முகக்கவசம் அணியாத 103 பேருக்கு  ரூ.20,600 அபராதம்
x
தினத்தந்தி 15 March 2021 3:03 AM IST (Updated: 15 March 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி, கோபி, பெருந்துறை பகுதியில் முகக்கவசம் அணியாத 103 பேருக்கு ரூ.20 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு
கொடுமுடி, கோபி, பெருந்துறை பகுதியில் முகக்கவசம் அணியாத 103 பேருக்கு ரூ.20 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.
கொடுமுடி
கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், முகக்கவசம் அணியாதவர்கள் மீது 200 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜய்நாத் தலைமையில் கொடுமுடியில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் முகக்கவசம் அணியாத 12 பேரிடம் இருந்து ரூ.200 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்காத ஒரு மளிகை கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
கோபி
இதேபோல் கோபி, கொளப்பலூர் பகுதிதியில் முக கவசம் அணியாமல் சென்ற 76 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர கோபி பகுதியில் நகைக்கடைகள், துணிக்கடைகள், சுவீட் மற்றும் மளிகைக்கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சுகாதார குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறையில் நடத்திய சோதனையில், வணிகக் கடைகளில் வேலை செய்பவர்கள் முக கவசம் அணியாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டது.
அதேபோல் கடைவீதிகளில் முக கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் 15 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே வசூல் செய்யப்பட்டது. கோபி, பெருந்துறை, கொடுமுடி பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 103 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.20 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது.

Next Story