கோவையில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோவையில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 15 March 2021 4:24 AM IST (Updated: 15 March 2021 4:24 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை தினமும் மாவட்ட வாரியான பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியான பட்டியலில் கோவை மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதியானது. 

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 468 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 46 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

 இதன்படி 55 ஆயிரத்து 387 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அத்துடன் தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 396 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மேலும் கோவையில் கடந்த 8-ந் தேதி 62 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து நேற்று 6-வது நாளாக கோவையில் கொரோனாவுக்கு உயிர் பலி எதுவும் இல்லை. இதுவரை 685 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story