வண்டலூர் போலீஸ் உட்கோட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக 16 பேர் கைது
சட்டமன்ற தேர்தலையொட்டி வண்டலூர் போலீஸ் உட்கோட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வண்டலூர்,
சட்டமன்ற தேர்தலையொட்டி வண்டலூர் போலீஸ் உட்கோட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கைசட்டமன்ற தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட டி.ஐ.ஜி. சாமுண்டிஸ்வரி உத்தரவிட்டார்.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச்செல்வன், அசோகன், நந்தகோபால் மற்றும் தனிப்படை போலீசார் தொடர்ந்து குற்றவாளிகளை கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் தேர்தலையொட்டி ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 73 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
16 பேர் கைதுஇந்தநிலையில் நேற்றுமுன்தினம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்கள், கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்ப்பட்ட 16 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த தகவல் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.