தலைவாசலில் தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விபத்தில் பலி


தலைவாசலில் தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 15 March 2021 5:58 AM IST (Updated: 15 March 2021 5:58 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசலில் தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கி பலியானார்.

முன்னாள் ஒன்றிய செயலாளர்
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த மும்முடி பகுதியில் வசித்து வந்தவர் அரங்கசாமி (வயது 70). இவர் தலைவாசல் ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆவார். நேற்று இவர் கெங்கவல்லி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தலைவாசல் மற்றும் வீரகனூர் பகுதியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் தலைவாசலில் இ்ருந்து தனது மொபட்டில் வீட்டுக்கு சென்றார். 

பலி
தலைவாசலில் தனியார் திருமண மண்டபம் எதிரில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து அரங்கசாமியின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் பலியான அரங்கசாமிக்கு, காந்திமதி என்ற மகளும், கருணாநிதி என்ற மகனும் உள்ளனர். இவர்களில் காந்திமதி தலைவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஆவார்.
அஞ்சலி
சாலை விபத்தில் அரங்கசாமி இறந்த தகவலை அறிந்து கெங்கவல்லி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, தலைவாசல் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story