தலித் மக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அம்பேத்கர் சிலை அமைக்க கோரிக்கை


தலித் மக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அம்பேத்கர் சிலை அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 15 March 2021 5:42 PM IST (Updated: 15 March 2021 5:42 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் தொகுதி தலித் மக்களின் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க தடையில்லா சான்று வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் வருவாய் துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை ஆகியவற்றை கண்டித்தும், உடனடியாக திருச்செந்தூர் தொகுதி நீண்ட நாள் கோரிக்கையான டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பதற்கான தடையில்லா சான்று தரவேண்டி திருச்செந்தூர் தொகுதி தலித் மக்களின் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, திருச்செந்தூர் பகுதிக்கு உட்பட்ட தோப்பூர், கரம்பவிளை, கணேசபுரம், பிரசாத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தலித் மக்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடியேற்றி தேர்தல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர். மேலும் தோப்பூரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு குழு மற்றும் பராமரிப்பு சங்க தலைவர் முரசு தமிழப்பன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில், சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் அரசூர் ராஜ்குமார், உறுப்பினர்கள் வடிவேல் முத்து, உதயா, இளந்தளிர் முத்து, செஞ்சுடர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story